பிரதமர், ஜனாதிபதிக்கு பாதுகாப்பில்லாத சூழல்! எச்சரிக்கும் கே.வி.தங்கபாலு

 
மொ

நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது என்று தெரிவித்திருக்கிறார் கே. வி. தங்கபாலு. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதால் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

க்வ்

 பிரதமரும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.   இந்த விடுதலைக்கு திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.

 வாயில் துணியை கட்டிக்கொண்டு தமிழக காங்கிரசார்   மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.   சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. வி. தங்கபாலு வாயில் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,    ’’யாரை குற்றவாளி என சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியததோ, அதே குற்றவாளியை தற்போது விடுதலை செய்ததால் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை போய்விட்டது’’ என்று குறிப்பிட்டார்.  அவர் மேலும்,  ‘’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதால் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி போன்ற தலைவர்களுக்கு வருங்காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது’’ என்றும் அவர் எச்சரித்தார்.