ஓபிஎஸ் -எடப்பாடியிடம் தனித்தனியாக பேசிய பிரதமர் மோடி

 
ed

ஓ. பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.  அந்த சந்திப்பில் அரசியல் குறித்து தான் பேசினார் என்று தகவல்.

 நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும்,  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார்.   மாலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை,  தமிழக அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் வரவேற்றுள்ளனர்.   அவர்களுக்கு அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி நின்றிருந்திருக்கிறார்.

em

 அமைச்சர்களை  கடந்து வந்த பிரதமர் மோடி,  எடப்பாடி பழனிச்சாமி முதுகில் தட்டிக் கொடுத்து நலம் விசாரித்திருக்கிறார்.   பிரதமரை பார்த்து வணங்கி நின்ற எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு பேசியிருக்கிறார் பிரதமர். 

 பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி புறப்படும் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமரை சந்தித்துள்ளனர்.   பிரதமரிடம்,   நூல் விலையை குறைக்க வேண்டும்,  கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்,  சேலம்-சென்னை இடையே  விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வேண்டும்,  காவிரியில் மாசு ஏற்படுவதை தடுக்க சுத்தமாக வைத்திருக்க நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 4 கோரிக்கைகள் கொண்ட கடிதத்தை கொடுத்திருக்கிறார்.

 இந்த சந்திப்பின்போது ஓ. பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்.  அப்போது அரசியல் தொடர்பான விவரங்களைத் தான் பேசியிருக்கிறார்கள் என தகவல்.