அந்த தொலைக்காட்சிக்கு அழுத்தம்! நிறுத்தியது யார்? இனி வெளிவருமா? அமுக்கி விடுவார்களா?

 
ட்வ்

நிறுத்தியது யார்? யாருக்கு பயம்? எதற்கு பயம்? வெளிவருமா? அமுக்கி விடுவார்களா? மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா?  என்று கேட்கிறார் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன். இது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கொ

 நீலகிரி மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக மறு விசாரணை நடந்து வருகிறது.   இந்த மறு விசாரணைக்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுவரைக்கும் 257 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.

 இந்த வழக்கு ஊட்டி ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை இன்று ஊட்டியில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   இந்த விசாரணையை முன்னிட்டு சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.   இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய திபு இன்றைக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.   இதையடுத்து வழக்கின்  மறுவிசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

aச்

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார். அவர்,   ‘’கொடநாடு உண்மைகள் பற்றிய குறும்படம்  21/6/2022ல் வெளிவர இருந்தது.   இறுதி நேரத்தில் அந்த தொலைக்காட்சி, அழுத்தத்தினால் நிறுத்தி விட்டதாக தகவல்கள்.   நிறுத்தியது யார்? யாருக்கு பயம்? எதற்கு பயம்? வெளிவருமா? அமுக்கி விடுவார்களா? மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா? 11/7/2022க்கு முன் வருமா? பொறுத்திருப்போம்’’ என்கிறார்.

அதாவது அதிமுகவின் அடுத்த பொதுக்குழுவு 11ம் தேதி நடைபெறும் என்று  அறிவித்திருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த  குறும்படம் வருமா என்று கேட்கிறார்.  இந்த விவகாரம் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.