நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.. பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி தகவல்

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார் என்று தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தற்போது 3,500 கி.மீட்டர் ஜன் சூராஜ் யாத்திரையில் உள்ளார். யாத்திரைக்கு இடையே பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நிதிஷ் குமார் பா.ஜ.க.வுக்கு எதிராக தேசியக் கூட்டணியை தீவிரமாக உருவாக்கி வருகிறார் என்று நினைத்து கொண்டிருக்கும் மக்கள், அவர் (நிதிஷ் குமார்) பா.ஜ.க.வுடன் ஒரு கோடு திறந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவார்கள். 

பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமார் தனது கட்சியின் (ஐக்கிய ஜனதா தளம்) எம்.பி.யும், மாநிலங்களவை எம்.பி.யும் மாநிலங்களவை துணை தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கிறார். இதுபோன்ற சூழல்கள் ஏற்படும் போதெல்லாம், அவர் மீண்டும் பா.ஜ.க.வுக்கு சென்று அதனுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் பிரசாந்த் கிஷோரின் கருத்தை ஐக்கிய ஜனதா தளம் மறுத்துள்ளது.

பா.ஜ.க.

பிரசாந்த் கிஷோரின் கருத்து குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், அவரது கூற்றுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். நிதிஷ் குமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும், பிரசாந்த் கிஷோர் ஆறு மாதங்களாகதான் தீவிர அரசியலில் உள்ளனர். குழப்பத்தை பரப்புவதற்காக கிஷோர் இதுபோன்ற தவறான கருத்தை கூறியுள்ளார் என தெரிவித்தார். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் அண்மையில் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார்.