பா.ஜ.க.வுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், உங்க எம்.பி.யை பதவியிலிருந்து விலகச் சொல்லுங்கள்.. பிரசாந்த் கிஷோர்

 
பிரசாந்த் கிஷோர்

உங்களுக்கு பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், உங்கள் எம்.பி.யை மாநிலங்களவை துணை தலைவர் பதவியிலிருந்து விலகச் சொல்லுங்கள் என்று நிதிஷ் குமாருக்கு பிரசாந்த் கிஷோர் நெருக்கடி கொடுத்தார்.

பிரசாந்த் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நிதிஷ் குமார் பா.ஜ.க.வுக்கு எதிராக தேசியக் கூட்டணியை தீவிரமாக உருவாக்கி வருகிறார் என்று நினைத்து கொண்டிருக்கும் மக்கள், அவர் (நிதிஷ் குமார்) பா.ஜ.க.வுடன் ஒரு கோடு திறந்திருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவார்கள். நிதிஷ் குமார் தனது கட்சியின் (ஐக்கிய ஜனதா தளம்) எம்.பி.யும், மாநிலங்களவை எம்.பி.யும் மாநிலங்களவை துணை தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கிறார். 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

இதுபோன்ற சூழல்கள் ஏற்படும் போதெல்லாம், அவர் மீண்டும் பா.ஜ.க.வுக்கு சென்று அதனுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பிரசாந்த் கிஷோரின் கருத்து குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அவர் தனது சொந்த விளம்பரத்திற்காக பேசுகிறார், அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எங்களுக்கு கவலை இல்லை. அவர் இளைஞர், அவரை நான் மதித்த காலம் உண்டு. நான் மதித்தவர்கள் என்னை அவமரியாதை செய்தார்கள் என தெரிவித்தார்.

பா.ஜ.க.

தன்னை விளம்பரத்துக்காக பேசுகிறார் என நிதிஷ் குமார் கூறியதற்கு பிரசாந்த் கிஷோ பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில், நிதிஷ் குமார் ஜி, உங்களுக்கு பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், உங்கள் எம்.பி.யை மாநிலங்களவை துணை தலைவர் பதவியிலிருந்து விலகச் சொல்லுங்கள். எப்போதும் இரு வழிகளையும் கொண்டிருக்க முடியாது என பதிவு செய்து இருந்தார்.