எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான நிதிஷ் குமாரின் முயற்சிகள் வீணாகி விடும்... பிரசாந்த் கிஷோர் உறுதி

 
பிரசாந்த் கிஷோர்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான நிதிஷ் குமாரின் முயற்சிகள் வீணாகி விடும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரு மாதத்துக்கு முன்பு அவர் பா.ஜ.க.வை விட்டு வெளியேறி, பா.ஜ.க.வுக்கு எதிரான தலைவர்களையும் கட்சிகளையும் சந்தித்து வருகிறார். ஆனால் அது  பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. 2024 தேர்தலுக்கு நம்பகமான முகம், மக்கள் நம்பிக்கை, தொண்டர்கள் மற்றும் வெகுஜன மக்கள் இயக்கம் தேவை. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

நிதிஷ் ஜி என் மீது கோபமாக இல்லை, அது அவர் பேசும் விதம். அவருடன் எனக்கு நல்லுறவு உள்ளது. நிதிஷ் குமார் யாரையாவது பா.ஜ.க.வின் பி டீம் என்று அழைத்தால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு மாதத்துக்கு முன்பு அவர் பா.ஜ.க.வின் கூட்டாளியாக இருந்தார். பீகாரில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கும், ஏழு கட்சிகளின் கூட்டணியான மகா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக இருக்காது.  

பா.ஜ.க.

பீகார் அரசியலில் மாற்றம் சமீபத்தில் 180 டிகிரியை எட்டியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன்னதாக இன்னும் பல திருப்பங்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் நோக்கில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.