காங்கிரஸில் இணைந்த பிரசாந்த் கிஷோரின் முன்னாள் உதவியாளர் சுனில் கனுகொலு..
பிரசாந்த் கிஷோரின் முன்னள் உதவியாளரும், தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகொலு காங்கிரஸில் இணைந்துள்ளார்.
தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக அந்த கட்சியின் தலைமையுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் அவர் நுழைவது குறித்து தீவிரமாக பேசப்பட்டது ஆனால் அது கடைசியில் நடக்கவில்லை. இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் பிரசாந்த் கிஷோரின் முன்னள் கூட்டாளியும், தேர்தல் வியூகவாதியான சுனில் கொனுகுலு காங்கிரஸில் இணைந்துள்ளார்.
தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகொலு காங்கிரஸில் இணைந்ததை அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் உறுதி செய்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸின் கட்சியின் மூத்த தலைவர் இது தொடர்பாக கூறியதாவது: சுனில் கொனுகுலு இப்போது அதிகாரப்பூர்வமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். கட்சியின் புதிய துறைக்கு தலைமை தாங்குவார். ஒரு உள் நபராக அவர் கர்நாடகத்தில் மட்டுமல்ல, மற்ற எல்லா தேர்தல்களிலும் பணியாற்றுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுனில் கொனுகுலு 2017 உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க., 2019 மக்களவை தேர்தலில் தி.மு.க., 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக பணியாற்றினார். சுனில் கொனுகுலு காங்கிரஸில் இணைந்திருப்பது அந்த கட்சிக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.