இந்திய தேசிய காங்கிரசை இறக்க அனுமதிக்க முடியாது.. பிரசாந்த் கிஷோர்

 
பாஜகவுக்கு அடுத்த செக்! பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை காலிசெய்ய மாஸ்டர் பிளான் போடும் பிரசாந்த் கிஷோர்! 

இந்திய தேசிய காங்கிரஸை இறக்க அனுமதிக்க முடியாது என பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தெரிவித்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டபபேரவை தேர்தல்களில் மோசமான தோல்வி என தொடர் தோல்விகளால் அரசியல் என்னும் கடலில் காங்கிரஸ் கப்பல் தத்தளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இழந்த பெருமையை மீட்க மற்றும் மறுமலர்ச்சிக்கான நடவடிக்கைகளை அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸூக்கு புத்துயிர் கொடுக்க அந்த கட்சி தற்போது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை மலை போல் நம்பி இருக்கிறது.

சோனியா காந்தி

2024 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வதற்காக பிரசாந்த் கிஷோர் தனது செயல்திட்டத்தை சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர்களிடம் விரிவாக எடுத்துரைள்ளார் என தகவல். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸூக்கான செயல்திட்டத்தை விவரிக்கும் போது, இந்திய தேசிய காங்கிரசை இறக்க அனுமதிக்க முடியாது, அது தேசத்துடன் மட்டுமே இறக்க முடியும் என்று உத்வேகம் அளிக்கும் வகையில் தனது உரையை தொடங்கினார்.

காங்கிரஸ்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் காங்கிரஸின் தற்போதைய நிலை, காங்கிரஸின் புள்ளியியல் பலம் மற்றும் பலவீனங்களை பிரசாந்த் கிஷோர் எடுத்துரைத்தார். மேலும் கட்சி மீண்டும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வேண்டுமானால், காங்கிரஸ் தனது தலைமை நெருக்கடியை தீர்க்க வேண்டும், கூட்டணி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், கட்சி அதன் முந்தைய இலட்சியங்களுக்கு திரும்ப வேண்டும், காங்கிரஸ் அடிமட்ட அளவில் அதன் தொண்டர்களையும், தலைவர்களையும் அணி திரட்ட வேண்டும்.  காங்கிரஸ் தனது தகவல் தொடர்பு முறையை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட சில அறிவுரைகளை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளார்.