10 லட்சம் பேருக்கு வேலை... தவறினால் பீகார் இளைஞர்களுடன் சேர்ந்து நிதிஷ் குமாரை முற்றுகையிடுவேன்.. பிரசாந்த் கிஷோர்

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

வாக்குறுதி அளித்தப்படி வரும் நாட்களில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கவில்லை என்றால் பீகார் இளைஞர்களுடன் சேர்ந்து நான் நிதிஷ் குமாரை முற்றுகையிடுவேன் என்று பிரசாந்த் கிஷோர் உறுதியாக தெரிவித்தார்.

பிரபல தேர்தல் வியுக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று பீகாரில்  ஜன் சுரஜ் பாதயாத்திரையை தொடங்கினார். பீகார் முழுவதுமாக  3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக 38 மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும்  சென்று மக்களை சந்தித்து வருகிறார். இந்த யாத்திரையின் போது கிழக்கு சம்பாரான் மாவட்டத்தில் உள்ள பஹர்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட மக்கானியா கிராமத்தில் செய்தியாளர்களை  சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் பேசுகையில் கூறியதாவது:

பிரசாந்த் கிஷோர்

காந்தி மைதானத்தில் நடந்த சுதந்திர தின உரையின்போது, மெகா கூட்டணி அரசு 10 லட்சம் பேருக்கு அரசுத் துறையில் வேலை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது என்று முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்தார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், புதிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தனது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் கூறியிருந்தார்.  வரும் நாட்களில் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால், பீகார் இளைஞர்களுடன் சேர்ந்து நானும் நிதிஷ் குமாரை முற்றுகையிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

ஒரு காலத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நெருங்கிய நம்பிக்கையாளராக கருதப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். மேலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் இருந்தார். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு நிதிஷ் குமார் ஆதரவு அளித்ததற்காக அவரை பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து 2020ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.