காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுக்க முடியாது - பிரஷாந்த் கிஷோர்

 
prashant kishor

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பலருக்கு ஆலோசனைகளை வழங்கிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைக்க பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.  கடந்த ஒரு வாரமாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்தித்து மக்களவை தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் அடங்கிய 600 பக்க டிஜிட்டல் செயல்பாடு மூலமாக பல்வேறு விளக்கங்களை எல்லாம் அளித்திருந்தார். மேலும், 2024ம் ஆண்டு தேர்தலுகாக அமைக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் பிரசாந்த் கிஷோரை சேரவும் கட்சியின் தலைமையில் வலியுறுத்தப்பட்டது. 

Will Cong Open Doors to Broken House for Prashant Kishor? Day After KCR  Curveball, Top Brass in Huddle

இந்நிலையில், அந்த கோரிக்கையை பிரசாந்த் கிஷோர் நிராகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவலா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், "காங்கிரஸ் கட்சியில் 2024 மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வியூக குழுவில் தன்னை இணைத்து கொள்ளும்படி கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால் நான் நிராகரித்து விட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு என் தேவையை விட கட்சிக்கு தலைமையும், கூட்டாக செயல்பட்டு கட்சியின் உள்கட்டமைப்பை சீர்திருத்த வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், கட்சியில் சேருவதை மட்டுமே பிரசாந்த் கிஷோர் மறுத்துள்ளார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ்க்கு திட்டங்களை நிச்சயம் வகுப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.