உண்மையான மாஸ்டர்களிடம் செல்ல வேண்டிய நேரம்.. பிரசாந்த் கிஷோரின் டிவிட்டால் பரபரப்பு

 
பிரசாந்த் கிஷோர்

உண்மையான மாஸ்டர்களிடம் செல்ல வேண்டிய நேரம் என்ற பிரசாந்த் கிஷோரின் டிவிட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியும், காங்கிரஸின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் ஒரு பகுதியாக இருக்குமாறும், வரவிருக்கும் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் உத்திகளை கவனித்துக் கொள்ளுமாறும் ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோரிடம் கேட்டுக்கொண்டார். 

காங்கிரஸ்

ஆனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்து விட்டார்.  கட்சியில் தனக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு காங்கிரஸ் உடன்பட மறுத்ததால் அந்த கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில், பீகாரிலிருந்து புதிய பயணத்தை தொடங்க உள்ளதாக சூசகமான தகவலை பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால் புதிய கட்சியை தொடங்க போகிறாரா அல்லது எதிர்க்கட்சியில் ஏதாவது ஒன்றில் சேர போகிறாரா என்பதை பிரசாந்த் கிஷோர் தெளிவாக குறிப்பிடப்வில்லை.

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில், ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. நான் பக்கத்தை திருப்பும்போது, உண்மையான மாஸ்டர்களுக்கு செல்லும் நேரம், மக்கள், பிரச்சினைகளை நன்றாக புரிந்து கொள்வதற்கும், மக்கள் சுராஜ்க்கான பாதை- மக்கள் நல்லாட்சி. பீகாரில் இருந்து தொடங்குகிறது என பதிவு செய்து இருந்தார்.