போலி காங்கிரஸ், போலி காந்தி.. சோனியா மற்றும் காங்கிரஸை விமர்சித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

 
காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்த சோனியா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்

சோனியா காந்தி மற்றும் காங்கிரஸை போலி காந்தி மற்றும் போலி காங்கிரஸ் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா-சீனா எல்லை பதற்றம், அருணாசல பிரதேசத்தில் சீனாவின் அத்துமீறல் ஆகியவை குறித்து விவாதிக்கக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சோனியா காந்தி தலைமையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், ஆர்.ஜே.டி., ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே பிரிவு சிவ  சேனா உள்ளிட்ட 12 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரகலாத் ஜோஷி

அதேசமயம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸை போலி காந்தி மற்றும் போலி காங்கிரஸ் என விமர்சனம் செய்தார். பிரகலாத் ஜோஷி கூறியதாவது: போலி காந்தி மற்றும் போலி காங்கிரஸ் ஆகியவை மகாத்மா காந்தியை நினைவில் கொள்வது நல்லது. முதலாவதாக, நாம் எதை இழந்தோம் மற்றும் பெற்றோம். 

அகமது படேல் விவகாரம்… மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சமீபத்திய உதாரணம்.. மனிஷ் திவாரி

அவர்களின் (காங்கிரஸ்)  பழம் பெரும் தலைவர் பண்டித் ஜவஹர்லால்  நேரு ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடு சபையில் நிரந்திர உறுப்பினரை எவ்வாறு இழந்தோம் என்பதை அவர்கள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக சீனாவுடனான எல்லை நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் மணிஷ் திவாரி ஆகியோர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர்.