பிரகாஷ்ராஜ், மாஜி முதல்வர்களுக்கு கொலை மிரட்டல்

 
p

 நடிகர் பிரகாஷ்ராஜ் , முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 61 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

 மோடி அரசை தொடர்ந்து கண்டித்து வந்ததால் இந்துத்துவா கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கல்புர்கி , கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோருக்கு குரல் எழுப்பி வந்த கௌரி லங்கேஷ் இந்துத்துவா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த நிலையில் 61 பேருக்கு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

pp

 கன்னட எழுத்தாளர் வீரபத்திரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கடிதம் வெளியாகி இருக்கிறது.   அந்த கடிதம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இறுதியில் இருந்து சாஹிஷ்னு இந்து என்ற பெயரில் வந்திருப்பதாக  கூறப்படுகிறது.   ஆறு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் 61 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

கொலை மிரட்டல் பட்டியலில்  முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா,  குமாரசாமி,  நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 61 பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அந்த கடிதத்தில்,  நீங்கள் அனைவரும் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறீர்கள்.   அதனால் நிபந்தனை  மன்னிப்பு கேட்க வேண்டும்.  அப்படி இல்லை என்றால்  உயிரிழப்பதற்கு தயாராகுங்கள்.   நாங்கள் வெறும் காகிதப் புலிகள் அல்ல.  சொல்வதை செய்வோம் என்று எச்சரிக்கை எடுத்துள்ளனர்.  இந்த கடிதம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டில் பிரகாஷ் ராஜ் உள்பட 15 பேருக்கு இதே மாதிரி கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.  ஜன.29 உங்களுக்கு கடைசி நாள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்த மிரட்டல் பட்டியலில்  குமாரசாமி, பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேரில் பெயர்கள் இருந்தன.