பேசும்போது பவர் கட் -கடுப்பான அமைச்சர் - தூக்கியடிக்கப்பட்ட 2பேர்

 
du

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படித்த அரசு மேல்நிலைப்பள்ளி  வேலூர் மாவட்டம் காட்பாடியில்  உள்ளது.   தான் படித்த அந்த  அரசு மேல்நிலைப் பள்ளியில்  இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை அடுத்து,  தமிழக நிறுவனத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.  

 கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி இது என்பதால் விழாவில் பேசும்போது மலரும் நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.   இப்போது திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது .  இதனால் நீண்ட நேரம் பேச முடியாமல் நின்று கொண்டு காத்திருந்தார் அமைச்சர் துரைமுருகன் .  மின்னிணைப்பு வராததால் கடுப்பான அமைச்சர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

ட்ம்

 அதன் பின்னர் அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி விட்டு சென்றார்.   அமைச்சர் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் சர்ச் சையினையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது .  

அமைச்சர் துரைமுருகன் பேசும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.   காட்பாடி தாரா படவேடு பகுதி துணை மின் நிலைய உதவி பொறியாளர்கள் கிரண்குமார், சிட்டிபாபு ஆகிய இரண்டு பேரும் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

உதவி பொறியாளர்கள் கிரண் குமார்,  சிட்டிபாபு ஆகியோர் அமைச்சர் பங்கேற்ற விழாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் அதை உடனே சரி செய்யாமல் அலட்சியமாக இருந்ததால், வடுகங்தாங்கல் துணை மின் நிலையத்திற்கு அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வேலூரில் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.   சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.