ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவிக்கு போட்டா போட்டி -திணறும் எடப்பாடி

 
ad

போன பொதுக்குழுவில் ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பறித்தது போலவே அடுத்த கூடும் பொதுக்குழுவில் பொருளாளர் பதவியையும் பறித்து விட எடப்பாடி முடிவெடுத்து இருக்கிறார்.   இதனால் ஓபிஎஸ் வகித்து வைத்து வரும் அந்த பொருளாளர் பதவியை தனக்குத் தர வேண்டும் என்று அதிமுகவின் சீனியர்கள் பலரும் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்.

adm

 அந்த பொருளாளர் பதவிக்கு போட்டோ போட்டி போடும் அனைவருமே தனக்கு முக்கியமானவர்கள் என்பதால் யாருக்குத்தான் கொடுப்பது என்று கையை பிசைந்து நிற்கிறாராம் எடப்பாடி.   யாருக்கு கொடுத்தாலும் மற்ற அனைவரும் அதிருப்தியை அடைந்து தனக்கு எதிராக திரும்பி வருவார்களோ என்ற சங்கடத்திலும் இருக்கிறாராம் எடப்பாடி.

பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.    எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என்றால், அந்த பதவிக்கு அடுத்ததாக அதிகாரம் உள்ள பதவி பொருளாளர் பதவி.   அதனால்தான் அந்த பொருளாளர் பதவிக்கு இத்தனை  போட்டா போட்டி இருக்கிறது என்பதை எடப்பாடியும் உணர்ந்திருக்கிறார்.    கட்சியில் தனது தனக்கு அடுத்ததாக அதிகாரத்தில்  உள்ள பதவி என்பதால் அதை யாருக்கு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று யோசிப்பதில் ரொம்பவே திணறிப் போய் இருக்கிறாராம் எடப்பாடி.