நாளைய முதல்வர் என போஸ்டர் ஒட்டக்கூடாது - அண்ணாமலைக்கு கடிவாளம்

 
aக்

பாஜகவில் அண்ணாமலை சுதந்திரமாக செயல்பட முடியாது.  அவருக்கு கடிவாளம் போட்டு வைத்திருக்கிறது ஆர்எஸ்எஸ் என்கிறார் பாஜகவில் இருந்து விலகிய மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன்.

  பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என்று எல்லோரும் நினைத்திருக்கிறார்கள்.  ஆனால் பாஜகவில் இரட்டை தலைமை இருக்கிறது.  அண்ணாமலையால்  மாநில தலைவராக சுதந்திரமாக செயல்பட முடியாது.   அவருக்கு ஆர். எஸ். எஸ் கடிவாளம் போட்டிருக்கிறது . 

அம்

நிர்வாகிகள் சிலரை நியமனத்திற்கு பரிந்துரைத்தால் அண்ணாமலையும் அதை ஏற்று செய்கிறேன் என்பார்.   ஆனால் அது நடக்காது . காரணம்,  அவரால் அதைச் செய்ய முடியாது என்கிறார் டாக்டர் சரவணன்.

 அவர் மேலும்,  பாஜக முழுக்க முழுக்க ஆர். எஸ். எஸ். விநாயக் என்பவரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.  பாஜகவை  கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம்தான் வழி நடத்துகிறார் கட்டுப்படுத்துகிறார்.   சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கூட நாளைய முதல்வர் என்று அண்ணாமலைக்கு போஸ்டர் ஒட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.   அண்ணாமலை மேடைக்கு வரும்போது ’அண்ணாமலை வாழ்க’ என்று கோஷமிடக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.   பாரத் மாதா கி ஜெ என்று மட்டும் முழக்கம்  இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.   அதனால் தான் அண்ணாமலைக்கு பாஜகவில் தனிமனித துதி இருக்காது என்கிறார்.