தங்கமணி வீட்டில் மீண்டும் ரெய்டு! பொன்னையன் ஆடியோ எதிரொலியா?

 
p

அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக அண்மையில் ஒரு ஆடியோ வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.   எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்துவதாக இருந்தது அந்த ஆடியோ. 

 அந்த ஆடியோவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிகம் சொத்து சேர்த்து வைத்துவிட்டு அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஸ்டாலினிடம் காப்பாற்ற சொல்லி ஓடிக் கொண்டிருக்கிறார்.  அதனால் அவர் ஸ்டாலினை திட்டி பேசுவதில்லை என்று பேசி இருந்தார்.

oo

 இந்த நிலையில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

 தங்கமணிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சரி பார்த்து வருகின்றனர். 

 திருச்செங்கோட்டில் உள்ள தங்கமணி வீட்டில் வருவாய் ,பொதுப்பணித்துறை ,லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்து ஆவணங்களை சரிபாதித்தனர்.  நில அளவிடும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  இடத்தின் மதிப்பு? எவ்வளவு இடத்தில் வீடு கட்டப்பட்டு இருக்கிறது? எந்தெந்த இடங்களில் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன? என்பது குறித்த நில அளவீடும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

t

 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி இருந்தார்கள்.  அப்போது பணம் ,நகைகள் ,முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில் மீண்டும் அவரது வீட்டில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருவது அதிமுக வட்டாரத்தில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.