போடா ம...று - ஆவேசப்பட்ட அமைச்சர் பொன்முடி

 
po

 ஓசி பயணம் என்று பேசி தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார் அமைச்சர் பொன்முடி.  திமுகவின் தலைவரும் முதல்வரும் ஆன மு. க. ஸ்டாலினே தன்னை  தூங்கவிடாமல் செய்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவிக்கும் அளவுக்கு போனது.   இந்த நிலையில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.   போராடிய மக்களை பார்த்து போடா.. மயிறு என்று ஆபாசமாக பேசி இருக்கிறார்.

 விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அடுத்த சித்தலிங்க மடம் கிராமத்தில் கிராமத்தின் எல்லை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சி வருவாய் சேர்ப்பதால் சித்தலிங்க மடம் பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

pon

 ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு கொட்டும் மழையில் சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.   அந்த வாக்குவாதம் முற்றியபோது பொதுமக்களில் ஒருவரை பார்த்து போடா ம..று என்று அருவருக்கத் தொகையில் பேசி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

 இதனால்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மேலும் கோபம் ஏற்பட்டிருக்கிறது.

கொட்டும் மழையிலும் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி,   சித்தலிங்கமடம் -புதுப்பாளையம் ஆகிய இரண்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து தான் இது போன்ற நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றனர் . உங்களை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றார் பொன்முடி.  

 பொதுமக்கள் மேலும் வாக்குவாதம் செய்த போது,  திமுக ஆட்சியில் தான் இந்த கிராமத்திற்கு மகளிர் மேல்நிலைப் பள்ளி கொண்டுவரப்பட்டன என்று தெரிவித்தார் . அப்பொழுது பொதுமக்கள் பகுதியில் ஒருவர்,  அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று சொன்னபோது, ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி,  10 வருஷமா யார் ஆட்சியில் இருந்தது.  அப்ப கேட்க வேண்டியதுதானே என்று ஆத்திரப்பட்டார்.

 இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிமுக- திமுக என கட்சி பற்றி எல்லாம் பேசாதீங்க நீங்க என்று சொல்லி சத்தம் போட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது.  பின்ன  அமைச்சர் பொன்முடி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.