பொன்முடியின் யோக்கியதை.. உதயநிதியின் சிறுபிள்ளைத்தனம்.. பாஜக விளாசல்

 
pon

 நீக்க வேண்டியதை நீக்காமல் சேர்க்க வேண்டியது சேர்க்காமல் உரை இருந்ததால் ஆளுநர் அதை படிக்காமல் தவிர்த்து அதிரடி காட்டினார்.  பதிலுக்கு ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலினும் அதிரடி காட்டினார்.   இதனால் நேற்று சட்டப்பேரவையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார் ஆளுநர்.   அவர் வெளியேறும் போது திமுக எம்எல்ஏக்கள்,  ’வெளியே போ’ என்று கூச்சலிட்டார்கள் .  அப்போது அமைச்சர்கள் குறிப்பாக அமைச்சர் பொன்முடி நடந்து கொண்ட விதம் குறித்தும்,  அதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து நேற்று மாலையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது குறித்தும் பாஜக கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

r

 தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதல் சட்டசபை கூட்டம்  ஆகும்.   தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் உள்ள 65 ஆவது பத்தியினை ஆளுநர்  வாசிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   சுயமரியாதை, சமூகநீதி, பெண்ணுரிமை, மத நல்லிணக்கம் ,பல்லுயிர் ஓம்புதல், அண்ணல் அம்பேத்கர், பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்ததமிழ் அறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் வாசிக்க மறுத்தார். 

 முன்னதாக அரசு அனுப்பிய அந்த உரையில் ஆட்சேபகரமான சில விஷயங்களை நீக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  மேலும் அவ்வையார், விவேகானந்தர் தொடர்பான சிலவற்றை உரையில் சேர்க்கும் படியும் கோரி இருக்கிறார்.  அந்த உரைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.  ஆனால் ஆளுநர் சொன்னபடி நீக்க வேண்டியதை நீக்காமல் சேர்க்க வேண்டியது சேர்க்காமல் இருந்ததால் ஆளுநர் தான் சொன்னபடி நீக்க வேண்டியதை படிக்காமல்,  சேர்க்க வேண்டியதை  சேர்த்து  வாசித்தார்.

rr

இதனால் திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கல் ஆளுநர் இருக்கை முன் சென்று அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.  பின்னர் வழி நடப்பு செய்தனர்.  ஆளுநர் உரையில் தவிர்த்தவற்றை, சேர்த்தவற்றையெல்லாம் தவிர்த்து அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.  பின்னர் முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநர் வரைவு உரையானது தமிழக அரசால் ஏற்கனவே அனுப்பப்பட்டு அவரால் ஏற்பளிக்கப்பட்டு அதன் பின்னர் அச்சடிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும் தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன.

 திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலை.  ஆனாலும் தமிழக அரசின் சார்பாக இருக்கிற காரணத்தால் சட்டசபை விதிகளை பின்பற்றி ஆளுநர் உரையை துவக்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதையும் நாங்கள் பதிவு செய்யவில்லை .

v

தமிழக அரசு தயாரித்து ஆளுநரால் இசைவளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரையை முழுமையாக படிக்காதது வருந்தத்தக்கது.  இது சட்டசபை மரபுகளை மீறிய ஒன்றாகும். ஆளுநர் இணைத்து படித்த பகுதிகள் அவை குறிப்பில் இடம் பெறாது என்கிற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 முதல்வர் திடீரென்று எழுந்து தீர்மானத்தை வாசிக்க துவங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவையிலிருந்து வழிநடப்பு செய்து விட்டனர்.  பாஜகவினரும் வெளிநடப்பு செய்து விட்டனர்.  உடனே ஆளுநர் தன் செயலாளரை அழைத்து முதல்வர் பேச்சு குறித்து விவரம் கேட்டு அறிந்தார்.   செயலாளர் விபரத்தைச் சொன்னதும் ஆளுநர் கோபமாக அங்கிருந்து வெளியேறி விட்டார்.  அப்போது திமுக எம்எல்ஏக்கள் ’வெளியே போ’,  ’வெளியே போ’ என்று கூச்சலிட்டார்கள்.

ra

பின்னர் இந்த சம்பவம் குறித்து மாலையில் அமைச்சர் உதயநிதி பேசியிருக்கிறார்.  இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’தி மு க அமைச்சர்கள் பலர் அநாகரீகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். நேற்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடியின் யோக்கியதையே உலகமே வேடிக்கை பார்த்து சிரித்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், விளையாட்டு  அமைச்சர் உதயநிதி அவர்கள் நேற்றைய சட்டசபை விவகாரம் குறித்து முதிர்ச்சியற்ற வகையில், சிறுபிள்ளைத்தனமாக, மலிவான விமர்சனங்களை குறிப்பிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது’’ என்கிறார்.