ஓபிஎஸ்-ஐ ஒருபோதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது- பொள்ளாச்சி ஜெயராமன்

 
Pollachi jayaraman

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார்.

அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் சட்டனற்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தென்னை விளை பொருட்கள், தென்னை நார், தென்னை மட்டை உள்ளிட்டவை ஏற்றுமதி தொடர்பாக இருக்கும் பிரச்சனைகளை கழைய கோரிக்கை வைத்தோம்.  மத்திய அரசு சார்பில் அதற்கு ஐ.ஏ.எஸ் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார். மேலும், தென்னை பொருட்கள் ஏற்றுமதிக்காக கூடுதல் கன்டெய்னர் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து அரசியல் ரீதியாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்ந்த கோவிலை காலால் எட்டி உதைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பது நீதிமன்றம் தெரிவிக்கும் எனவும் அவைமட்டுமல்லாம் குற்றவாளிகளை அன்றைய தினம் தமிழக மக்கள் பார்த்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அதிமுக சூறையாடப்பட்ட விவகாரத்தில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ! அவர்கள் அனைவரும் குற்றவாளிகளே எனவும் தெரிவித்தார். 

பொதுக்குழு நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் வகையில் சிறப்பாக அமையும், அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி மட்டுமே என தெரிவித்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருவதாக கூறினார். 

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக அனைத்து உறுப்பினர்களும் செயல்படுகிறோம். எனவும், ஒ.பி.எஸ்-ஐ ஒருபோதும் எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்றார்.