பிளான் சக்சஸ்! இதுதான் எங்கள் மாஸ்டர் பிளான் - கனல் கண்ணன்

 
k

 பிளான் சக்சஸ். இதுதான் எங்கள் மாஸ்டர் பிளான் என்று  கூறியிருக்கிறார் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும்  இந்து முன்னணியின்  மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளருமான கனல் கண்ணன்.  

s

 தமிழ்நாடு விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது.   ஆளுநருக்கும் திமுக அரசுக்குமான மோதல் வலுத்து வருகிறது.   இந்த நிலையில் இது குறித்து கனல் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது,    ஆளுநரை கேவலப்படுத்தும் இந்த அரசு நல்ல அரசா? தமிழை வளர்க்கிறேன் என்று சொல்கிறவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? 

 ஆளுநர் தமிழை அழகாக பிரபலப்படுத்தி  பாடும்போது சபாநாயகர் கத்துங்கள்..கத்துங்கள்.. என்று சிக்னல் கொடுக்கிறார்.  இதெல்லாம் எவ்வளவு கொடுமையான விஷயம் என்று ஆத்திரப்படுகிறார்.

 அவர் மேலும்,   வெளியேற்ற வேண்டும் என்று பிளான் பண்ணியே ஒரு பேப்பரை தயார் செய்து வைத்திருக்கின்றார்கள்.  கேட்டால் தீர்மானம் என்கின்றார்கள்.  தீர்மானம் என்று அச்சிடப்பட்ட பேப்பர் முன்பே வந்து விடுமா? என்று கேட்கும் கனல் கண்ணன்,   இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்து நாடு.  இது திராவிட மண்ணல்ல. தமிழக போலீஸ் ,தமிழக முதல்வர் என்று இதற்கு முன்பு சொன்னதில்லையா ? என்று கேட்கும் கனல் கண்ணன்,  ஒரத்தநாடு- வல்லநாடு  போன்ற ஊர்கள் எல்லாம் இருக்கின்றன.   இவை அனைத்தும் தனி நாடாகி விடுமா? 

g

 தாங்கள் தனி நாடு என்று சொன்னால் நீங்கள் திராவிட நாடு என சொல்லுவீர்கள்.   நாங்கள் தமிழகம் என்று சொன்னால் நீங்கள் தமிழ்நாடு என்று சொல்லிவிட்டீர்கள். இதுதான் எங்கள் மாஸ்டர் பிளான்.  பிளான் சக்சஸ் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.