நீங்க கிள்ளுகிற மாதிரி கிள்ளுங்க நான் அழுகிற மாதிரி அழுகிறேன் -சீமான் கலகல

 
see

நீங்க கிள்ளுகிற மாதிரி கிள்ளுங்க நான் அழுகிற மாதிரி அழுகிறேன் என்ற கதை தான் இது என்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்த போது நாம் தமிழர் கட்சியின்.   முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் .  ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவை மீறி ஆட்களைப் திரட்டி  போராட்டத்தில் ஈடுபட்டதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  

u

இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது , புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராடியதற்காக அதிமுக ஆட்சியில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கொரோனா காலகட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று டிஜேபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.  ஆனால் எங்களை மட்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு நேரில் வரவேண்டும் என்று அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டிருக்கிறார்.

 உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் . இதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.   இந்த நிலையில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கேட்டு தலைமைக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

 இது குறித்து சீமானிடம் நிருபர்கள் கேட்க,  ‘’ நீங்க கிள்ளுகிற மாதிரி கிள்ளுங்க நான் அழுகிற மாதிரி அழுகிறேன் என்ற கதை தான் இது.  உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக வருவார்.  உதயநிதியை நிச்சயமாக அமைச்சராக்குவார்கள் . ஐந்தாண்டு காலத்தில் அமைச்சராகவே மாட்டேன் என்று உதயநிதி உறுதியாக கூறுவாரா?  மற்றவர்களை பேச வைக்கும் போது எல்லோரும் விரும்புகிறார்கள்.  எல்லோரும் கேட்கிறார்கள் என்று சொல்லும் போது உதயநிதிக்கு ஆதரவு இருக்கு எதிர்ப்பு இல்லை என்று சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்’’ எனக் கூறியிருக்கிறார் சீமான்.