பாஜக எம்.எல்.ஏவை பிறாண்டி எடுத்த மக்கள் - சட்டை கிழிந்து காயம்

பாஜக எம்எல்ஏவை போட்டு பிறாண்டி எடுத்ததில் சட்டை கிழிந்து காயம் அடைந்திருக்கிறார். ஆதரவாளர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையிலும் போலீசார் எம்எல்ஏவை பாதுகாத்து அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பெண் உயிரிழந்த விவகாரத்தில் பொதுமக்கள் இவ்வாறு ஆவேசத்தை காட்டி இருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் சிக்மளூர் மாவட்டம் குண்டூரில் யானை மிதித்து ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல மூடிவரை தொகுதி எம்எல்ஏ குமாரசாமி கிராமத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி எம்எல்ஏ வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வனவிலங்குகள் தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியும் அலட்சியமாக இருந்து விட்டீர்கள். இதனால் தான் இப்போது ஒரு பெண் உயிர் இழந்திருக்கிறார் என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அவரைப் போட்டு பிராண்டி எடுத்ததில் எம்எல்ஏவின் சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது.
கிராம மக்களின் ஆவேசத்தை பார்த்த எம்எல்ஏ ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள். ஆனால் போலீசார் மட்டும் சுற்றி நின்று பொதுமக்கள் கிராமத்து மக்களை தடியடி நடத்தி விரட்டி விட்டு எம்எல்ஏவை காப்பாற்றி அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.