ஸ்டாலின், அன்புமணியை விட விஜய்க்குத்தான் மக்கள் ஆதரவு! ரசிகர்கள் போஸ்டர்

 
vv

காங்கிரசிலும் தமிழக அரசியலிலும் வாரிசு விவகாரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.  தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் வாரிசு அரசியல் இருந்து வருகிறது.

 உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது குறித்து பலரும் வாரிசு அரசியல் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,  ராகுல் காந்தி என்று வாரிசு அரசியலை ஆரம்பித்து மு. க. ஸ்டாலின்,  அன்புமணி ராமதாஸ்,  துரை வைகோ என்று வாரிசு அரசியல் குறித்து விமர்சித்துள்ளார்கள்.

vi

 இவர்கள் எல்லாரையும் தாண்டி விஜய்க்குத் தான் மக்களிடம் அதிகம் செல்வாக்கு இருக்கிறது என்றும் அவர்கள் சொல்லி போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.  விஜய்யின் பிறந்தநாளின் போதும் அவரது திரைப்படங்கள் ரிலீசின் போதும்  அவரது ரசிகர்கள் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

 விஜய் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் செயல்பட்டு வருவதால் அதை புரிந்து கொண்ட அதற்கு தயாராகி வரும் அவரது ரசிகர்களும் விஜய்யை அரசியலுடன் சம்பந்தப்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.   அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின்,  துரை வைகோ , அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் புகைப்படங்களை போஸ்டரில் போட்டு,   ’எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசு வருக வாகை சூடுக என்று மதுரையில்  விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது அரசியலில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.