கண்ணீரில் மக்கள், கும்மாளம் போடும் எம்.எல்.ஏக்கள்..- இது பாஜகவின் சகுனி வேலை என கே. பாலகிருஷ்ணன் கண்டனம்..

 
K balakrishnan

அசாமில் மக்கள் கண்ணீரில் இருக்கும்போது, பாஜவின் சகுனி வேலையால்  சிவசேனா எம்.எல்.ஏக்கள் கும்மாளம் போட்டுக்கொண்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி துக்கியுள்ளன. சிவசேனா கட்சி மூத்த அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே,  தனது ஆதரவாளர்களான 40க்கு மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில் ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதனால் மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பாஜகவின் சதி வேலை என பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் செலுத்தி வருகின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே

அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்  கே. பாலகிருஷணன் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அசாமில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தது 200 உயிர்கள் இதுவரை  லியாகியிருக்கின்றன. உண்மை பலி விபரம் இன்னும் அதிகமாக இருக்கும்.  வீடுகளை, இருப்பிடத்தை இழந்து சாலைகளில் கண்ணீரோடு தவிக்கும் மக்களின் துயரை வார்த்தைகளால் அடக்க முடியாது. இந்த நிலைமை பற்றியெல்லாம் ஒன்றிய அரசுக்கு கொஞ்சமும் கவலை கிடையாது.

அசாம் வெள்ளம் : 100 பேர் பலி..  54.7 லட்சம்  மக்கள் பாதிப்பு..

அசாம் பாஜக முதல்வருக்கும் எந்த பதட்டமும் இல்லை. மாறாக அவர் ரேடிசன் புளூ விடுதியை கண்காணித்துக்கொண்டுள்ளார். அங்கேதான், மராட்டிய எம்.எல்.ஏக்கள் கடத்தி வரப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில் கும்மாளத்துடன் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். கூட்டணி அரசை கவிழ்த்து, மராட்டியத்தில் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக இந்த சகுனி ஆட்டத்தை நடத்தி வருகிறது. மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டு, அதிகார மமதையில் ஆட்டம் போடுகிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மை முகம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.