ராகுல் யாத்திரைக்கு ராஜஸ்தானில் இருந்து படகில் ஆட்களை அழைத்து வருகிறார்கள் - அண்ணாமலை

சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல்காந்தி சந்தித்து பேசியது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ராகுல் - ஜார்ஜ் பொன்னையா பேசிய அந்த வீடியோவை பகிர்ந்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சார்ஜ் பொன்னையா இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கலந்துரையாடலின் ராகுல் காந்தி கலந்து கொண்டிருக்கிறார் இந்த இழிவான விவாதத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை இந்த கலந்துரையாடல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி , பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணத்தை துவங்கி இன்று நாலாவது நாள் நடை பயணத்தை மேற்கொண்டார். இந்த நிலையில் கன்னியாகுமரியில் அவர் சர்ச்சைக்குரிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து உரையாடினார்.
இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவமா? அது உண்மைதானா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்ப, அதற்கு ஜார்ஜ் பொன்னையா, இயேசு தான் உண்மையான கடவுள். தன்னை ஒரு மனிதனாக உண்மையான மனிதனாக வெளிப்படுத்துகின்றார் . நாம் கடவுளை மனிதனாக பார்க்கிறோம் எனச் சொல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாரத மாதாவை தகாத வார்த்தைகளால் பேசி சிறைக்குச் சென்றவர் ஜார்ஜ் பொன்னையா. அந்த சர்ச்சுக்குரிய சர்ச்சைக்குரிய பாதிரியாரை ராகுல் காந்தி சந்தித்ததன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கலந்துரையாடலில் ராகுல் காந்தி கலந்து கொண்டிருக்கிறார். இந்த இழிவான விவாதத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் இந்த கலந்துரையாடல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
India’s divider & chief @RahulGandhi’s “Bharat Thodo” Elite walkathon with 60 air-conditioned caravans concluded in Kanyakumari after meeting Andolan Jeevi (some of whom were slapped sedition charges during UPA), Anti-Nationals & divisive elements of our society. (1/3) pic.twitter.com/5QW77amwR2
— K.Annamalai (@annamalai_k) September 10, 2022
அவர் மேலும், 60 குளிரூட்டப்பட்ட கேரவன்களுடன் இந்தியாவை பிரிக்க நினைக்கும் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை வந்தவுடன் அந்தோலன் ஜீவி, தேசவிரோதிகள் நமது சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை சிந்தித்த பின்னர் கன்னியாகுமரியில் நிறைவடைந்து இருக்கிறது. இந்த யாத்திரையில் தமிழ்நாட்டில் இருந்து வெகு சிலரே கலந்து கொண்டதால் ராகுல் காந்தியின் செல்வாக்கை காட்டுவதற்காக ராஜஸ்தானில் இருந்து மக்களை படகில் அழைத்து வந்துள்ளார்கள் என்று விமர்சித்திருக்கிறார்.