மக்கள் கட்சி! அரசியல் பயணம்! 3ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரை! பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

 
p

மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் வியூக நிபுணராக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர்,  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து  கட்சியை வெற்றிபெற வைக்கப் போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன . பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் தலைமையுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஆனால் ஆலோசனைக்குப் பின்னர் அவர் தான் காங்கிரஸில் இணையவில்லை என்று தெரிவித்திருந்தார். 

k

  காங்கிரஸுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து கிஷோர் பிரசாந்த் கிஷோர்,   என் திட்டப்படி செயல்பட அனைத்து விஷயங்களிலும் அவர்கள் தீவிர கவனம் செலுத்தினார்கள்.  ஆனால் காங்கிரஸ் அமைப்பில் எந்த மதிப்பும் இல்லாத அதிகாரம் அளிக்கும் செயல் குழுவில் நான் சேர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதனால் பேச்சுவார்த்தை முற்றுப்  முற்று பெற்றுவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

  பிரசாந்த் கிஷோர்  தனிக் கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.   இந்த நிலையில் தனது சொந்த மாநிலம் பீகாரில் வரும் அக்டோபர் 2ம் தேதியில் இருந்து 3 ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரை செல்வேன் என்று அறிவித்திருக்கிறார்.   பீகாரில் புதிய நடைமுறையைக் கொண்டுவர என்னையே அர்ப்பணிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

sp

பிரசாந்த் கிஷோரின் இந்த நடவடிக்கைகளால் அவர் அரசியல் கட்சியுடன் துவங்க போகிறார் என்று பலரும் சொல்ல,   அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது தற்போது வரைக்கும் எனது திட்டத்தில் இல்லை.  ஒருவேளை வருங்காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.  இப்போது நான் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க விரும்புகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் வளர்ச்சி இல்லை . அரசியல் கட்சி எதனையும் நான் இன்று அறிவிக்க போவதில்லை.  

 பீகாரில் மாற்றம் கொண்டுவர விரும்பும் அனைவரையும் ஒன்று சேர்ப்பது தான் எனது நோக்கம்.   வருங்காலத்தில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் அது பற்றி வருங்காலத்தில் முடிவு செய்யலாம் . அப்படி உருவாகும் அரசியல் கட்சி பிரசாந்த் கிஷோரின் கட்சியாக இருக்காது.  அது மக்களின் கட்சியாக தான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும்,   பீகார் முதல்வர் நிதீஷ்  எனது தந்தை போன்றவர்.   அதற்காக எனக்கு தனியான அரசியல் பயணம் இருக்க முடியாது என்ற அர்த்தம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.