கேஸ் விலை உயர்வு.. இன்று மக்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை.. காங்கிரஸ்

 
சமையல் கேஸ்

கேஸ் விலை உயர்வை குறிப்பிட்டு, இன்று மக்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என மோடி அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

மத்திய அரசு நேற்று வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தியுள்ளது. அதன்படி, டெல்லியில் 14.5 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையில் கேஸ் சிலிண்டர் விலை நேற்று முதல் ரூ.999.50ஆக அதிகரித்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் விலை உயர்வை குறிப்பிட்டு பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: மோடி அரசு மக்களிடம் மானியத்தை கைவிட சொன்னது. 2015-16ல் 18 கோடியாகவும், 2017ல் பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டது. நாளுக்கு நாள் மக்கள் மீது அதிக சுமையை உருவாக்குகிறீர்கள். இன்று மக்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

பிரதமர் மோடி

காங்கிரஸ் அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியது மற்றும் ஆதரித்தது. அதிக விலையின் சுமையை மக்கள் மீது சுமத்தக்கூடாது என்பதற்காக காங்கிரஸால் இந்த மானியம் வழங்கப்பட்டது. சமையில் கேஸ் விலையின் இந்த பரிசுடன் 3 நாடுகளில் (ஐரோப்பிய பயணம்) 60 போட்டோ ஷூட்கள் முடித்து விட்டு, 65 மணி நேரத்துக்கு பிறகு ஷாப் (பிரதமர்  மோடி)மீண்டும் வந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.