கெஞ்சினாலும் உங்களை பா.ஜ.க. சேர்த்துக் கொள்ளாது.. சிசோடியாவுக்கு பதிலடி கொடுத்த பர்வேஷ் வர்மா

 
பா.ஜ.க.

தரையில் படுத்து கெஞ்சினாலும் உங்களை பா.ஜ.க. சேர்த்துக் கொள்ளாது என்று மணிஷ் சிசோடியாவுக்கு பர்வேஷ் வர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா டிவிட்டரில், பா.ஜ.க.வில் இணைந்தால் என் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து கொள்வதாக பா.ஜ.க.விடம்  இருந்து தனது செய்தி வந்தது. பா.ஜ.க.வில் சேர்வதை விட தலை துண்டிக்கப்படுவதையே நான் விரும்புகிறேன் என பதிவு செய்து இருந்தார்.

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்

மணிஷ் சிசோடியாவின் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பர்வேஷ் வர்மா கூறுகையில், மணிஷ் சிசோடியா தினமும் காலையில் பிராணாயாமம் செய்ய வேண்டும். அவர் கஞ்சா உட்கொண்டாரா? பா.ஜ.க.வில் சேருமாறு கூறியவரின் பெயரை அவர் சொல்ல வேண்டும். அவர் மூக்கை தரையில் தேய்த்தாலும் கூட (தரையில் படுத்து கெஞ்சினாலும் கூட) பா.ஜ.க. அவரை எடுக்காது என தெரிவித்தார்.

பர்வேஷ் வர்மா

டெல்லியின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த அதிகாரிகளுக்கு சொந்தமான 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.  மதுபான கொள்கை ஊழல் வழக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.