பண்ருட்டியார் சொன்னது நல்ல காமெடி - மாபா பாண்டியராஜன்

 
ma

ஓபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லி இருப்பதை நகைச்சுவையாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

 அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  ஓ .பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்தவருமான மாபா பாண்டியராஜன் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளார்.  அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த தாயில்பட்டியில் அதிமுக சார்பில் திமுக அரசின் வரி உயர்வை எதிர்த்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

p

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிச்சாமியில் நடந்து முடிந்து 6 மாதங்கள் கழித்து 200 பேருக்கு பொறுப்புகள் வழங்கி அவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார் ஓபிஎஸ்.  இந்த நிகழ்ச்சிக்கு எந்த வித அங்கீகாரமும் சட்ட ரீதியான அரசியல் ரீதியான அங்கீகாரம் இல்லை. 

 எந்த விதத்திலும் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அதிமுகவுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கும் அதிமுக தான் தனித்து இயங்கி வெற்றி பெறக் கூடியது. 

 அதிமுக தனியாக நின்று ஜெயிக்க முடியும்.  யாரையும் தூக்கி சுமக்க வேண்டியது அவசியம் இல்லை என்று சிவி சண்முகம் பேசினார்.   நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் சீட்’கள் கொடுக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறது அதிமுக.   அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்களை நாங்கள் ஒருங்கிணைத்து இருக்கிறோம் .  ஜனவரி 4ஆம் தேதிக்கு பின்னர் சட்ட ரீதியான அங்கீகாரம் எங்களுக்கு கிடைக்கும் . ஆனால் நீதிமன்றம் மூலம் ஓபிஎஸ் அணிக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னதை நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டும் என்கிறார்.