பயங்கரவாதத்தை குறிவைக்க சொன்னால் அவர்கள் என்னை குறிவைத்தனர்.. காங்கிரஸை தாக்கிய பிரதமர் மோடி
பயங்கரவாதத்தை குறிவைக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் என்னை குறிவைத்தனர் என்று காங்கிரஸ் கட்சிய பிரதமர் மோடி தாக்கினார்.
குஜராத் மாநிலம் கெடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் கூறியதாவது: குஜராத் நீண்ட காலமாக பயங்கரவாதத்தின் இலக்காக இருந்தது. சூரத் மற்றும் அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் குஜராத் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் இருந்தது. பயங்கரவாதத்தை குறிவைக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் என்னை குறிவைத்தனர்.
நாட்டில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது. பாட்லா ஹவுஸ் என்கவுன்டரின் போது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் அழுதனர். தீவிரவாதம் கூட காங்கிரஸின் வாக்கு வங்கி. இப்போது காங்கிரஸ் மட்டுமல்ல, குறுக்குவழி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் நம்பிக்கை கொண்ட பல கட்சிகள் எழுந்துள்ளன. 2014ல் உங்களின் ஒரு வாக்கு, நாட்டில் பயங்கரவாதத்தை கொல்வதில் நிறைய வித்தியாசத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டின் நகரங்கள் ஒரு புறம் இருக்கட்டும், நமது எல்லைகளை தாக்கும் முன் பயங்கரவாதிகள் யோசிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் எங்கள் சர்ஜிக்கள் ஸ்டிரைக்கை கேள்விக்குள்ளாக்குகிறது. 25 வயதுக்குட்பட்ட மாநில இளைஞர்கள் ஊரடங்கு சட்டம் எப்படி இருக்கும் என்று பார்த்ததில்லை. அவர்களை வெடிகுண்டு வெடிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் அரசால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.