வம்ச அரசியல், வம்ச அரசியல் கட்சிகளால் நாடு சலிப்படைந்துள்ளது.. தங்கள் இருப்புக்காக போராடும் கட்சிகளை கேலி செய்யாதீர்கள்.. மோடி

 
இனிதான் ஆட்டம் ஆரம்பம்.. குடும்ப அரசியல் நாட்டிற்கு கேடு.. - பிரதமர் மோடி கடும் தாக்கு..

வம்ச அரசியல், வம்ச அரசியல் கட்சிகளால் நாடு சலிப்படைந்துள்ளது, தங்கள் இருப்புக்காக போராடும் கட்சிகளை கேலி செய்யாதீர்கள் ஆனால் அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று பா.ஜ.க.வினரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் கடந்த 2 தினங்களாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: தங்கள் இருப்புக்காக போராடும் பல்வேறு கட்சிகள் குறித்தும் அவர்களை பார்த்து சிரிக்கவோ,  கேலி செய்யவோ கூடாது, மாறாக அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டு அவர்கள் செய்த இது போன்ற செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ரவி சங்கர் பிரசாத்

தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சி தொண்டர்களின் துணிச்சலுக்கு தனது ஆழ்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், வம்ச அரசியல் மற்றும் வம்ச அரசியல் கட்சிகளால் நாடு சலிப்படைந்துள்ளது, அத்தகைய கட்சிகள் நீண்ட காலம் வாழ்வது கடினம். பா.ஜ.க. தொண்டர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வரும் மாநிலங்களில் இன்னும் சித்தாந்தத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.

நமது சிந்தனை செயல்முறை திருப்தியளிப்பதில் இருந்து நிறைவேற்றமாக இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். பா.ஜ.க. தொண்டர்கள்  அன்பு பயணம் (ஸ்னே யாத்ரா) மேற்கொண்டு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.