மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது 50க்கும் மேற்பட்ட மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தது... பிரதமர் மோடி தாக்கு

 
காங்கிரஸ்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது 50க்கும் மேற்பட்ட மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநிலங்களவையில்,குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தின் மீது பதிலளித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சியான காங்கிரஸின் பெயரை முதலில் நேரடியாக குறிப்பிடாமல் பின்பு நேரடியாகவும் தாக்கி பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி பேசியதாவது: சிலருக்கு சுயபரிசோதனை செய்ய வேண்டும். கோவிட்-19 தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அரசாங்கம் விரிவான விளக்கத்தை அளிக்கவிருந்தபோது, அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில அரசியல் கட்சிகளிடம் பேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் வராமல் கூட்டத்தை புறக்கணித்தீர்கள். சரத் ராவுக்கு (சரத்பவார்) எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முடிவு அல்ல என்றும், தன்னால் முடிந்தவரை பலரிடம் பேசுவேன் என்று சரத் பவார் தெரிவித்தார். அவர், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டார். நெருக்டி ஒட்டு மொத்த மனித குலத்தின் மீதும் இருந்தது. ஆனாலும் நீங்கள் கூட்டத்தை புறக்கணித்தீர்கள். 

மோடி

காங்கிரஸ் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தது என்றும், பா.ஜ.க. கொடியை ஏற்றியது என்றும் சபையில் கூறப்பட்டது. இது சபையில் நகைச்சுவையாக சொல்லப்படவில்லை. இது தேசத்துக்கு ஆபத்தான தீவிர சிந்தனையின் விளைவு. இந்தியா 1947ல் பிறந்தது என்று சிலர் நம்புகிறார்கள், இந்த சிந்தனையால் பிரச்சினைகள் எழுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக பணிபுரியும் வாய்ப்பை பெற்றவர்களின் கொள்கைகளில் இந்த மனநிலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது வக்கிரங்களை பிறப்பித்தது. இந்த ஜனநாயகம் உங்கள் பெருந்தன்மையால் அல்ல. 1975ல் ஜனநாயகத்தை கழுத்தை நெரித்தவர்கள் இதைப் பற்றி பேசக்கூடாது. காங்கிரஸ் தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பதை மகாத்மா காந்தி அறிந்திருந்தார், மேலும் அவர் அதை முன்கூட்டியே கலைக்க விரும்பினார். 

மகாத்மா காந்தி

காந்தியின் விருப்பப்படி காங்கிரஸை கலைத்து இருந்தால், ஜனநாயகம் வம்சத்திலிருந்து (குடும்பம்), இந்தியா ஒரு வெளிநாட்டு பார்வைக்கு பதிலாக தேசிய தீர்மானங்களின் பாதையில் நடந்திருக்கும். காங்கிரஸ் இல்லாதிருந்தால், எமர்ஜென்சி என்ற கறையே இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லாவிட்டால்,  சீக்கியர்களை படுகொலை செய்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதத்தின் தீயில் பஞ்சாப் பல ஆண்டுகளாக எரிந்திருக்காது. காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேற  வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ் இல்லாவிட்டால் மகள்கள் தந்தூரில் தூக்கி எறியப்பட்ட சம்பவமே நடந்திருக்காது. நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ஆண்டுகளை அழித்தது. வளர்ச்சியில் காங்கிரஸ் தடைகளை உருவாக்குகிறது. மாநில அரசுகளை இழிவுப்படுத்துவதும், சீர்குலைப்பதும், பதவி நீக்கம் செய்வதும்தான் காங்கிரஸ் மேலிடத்தின் கொள்கை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது 50க்கும் மேற்பட்ட மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தது. காங்கிரஸ் கட்சி நகர்புற நக்சல்களின் பிடியில் சிக்கியுள்ளது. அவர்கள் அதன் (காங்கிரஸ்) எண்ணங்களையும், சித்தாந்தங்களையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.