இது மோடி மற்றும் யோகி அரசு, நகரங்களுக்கு மட்டுமல்ல, கிராமங்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்வோம்.. மோடி

 
மோடி

இது மோடி மற்றும் யோகி அரசு, நாங்கள் நகரங்களுக்கு மட்டுமல்ல, கிராமங்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.14,850 கோடி மதிப்பில் 296 கிலோ மீட்டர் தொலைவுக்கு போடப்பட்டுள்ள பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே தடையற்ற இணைப்பையும், பிராந்தியத்தில் மேலும் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும்.

பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே

இந்த விரைவு சாலையால், இப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படும். இது மோடி மற்றும் யோகி அரசு, நாங்கள் நகரங்களுக்கு மட்டுமல்ல, கிராமங்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்வோம். டெல்லி-மீரட் விரைவுச்சாலை எங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, எங்களால் திறந்து வைக்கப்பட்டது. பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே சாலையிலும் இதேதான் நடந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்பட இருந்தது ஆனால் நாங்கள் எங்கள் காலக்கெடுவுக்கு முன்னதாகவே (8 மாதங்களுக்கு முன்னதாக) திட்டத்தை நிறைவு செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யோகி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், இந்த விரைவுச்சாலை பண்டல்கண்ட் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தில் புதிய பரிமாணத்தை சேர்க்கும். இந்த விரைவுச்சாலை 7 மாவட்டங்கள் வழியாக சென்று பின்னர் ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையுடன் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.