நிலக்கடலைக்கும் பருத்தி விதைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பாதயாத்திரை .. மோடி தாக்கு

 
நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

நிலக்கடைக்கும், பருத்தி விதைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்கள் மற்றும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கா நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள் என்று ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார்.

குஜராத்தில் சுரேந்திரநகரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: இப்போது காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் வளர்ச்சி பற்றி பேசுவதில்லை. மாறாக காங்கிரஸ் தலைவர்கள் மோடிக்கு அவரது நிலையை காட்டுவோம் என்று கூறுகிறார்கள். அவர்களின் ஆணவத்தை பாருங்கள். அவர்கள் உண்மையில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதேசமயம் நான் அந்தஸ்து இல்லாத வேலைக்காரன். கடந்த காலங்களில் கேவலமான மனிதன், மரண வியாபாரி, இழிவானவர் போன்ற வார்த்தைகளை காங்கிரஸ் எனக்கு பயன்படுத்தியது. இந்த அந்தஸ்து விளையாட்டை விளையாடுவதை விட வளர்ச்சி பற்றி பேசுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். 

மோடி

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எனது கவனம் என்பதால் இது போன்ற அவமானங்களை விழுங்குகிறேன். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக சிலர் பாதயாத்திரை செய்கிறார்கள். நர்மதா திட்டத்தை 40 ஆண்டுகளாக வழக்குகள் மூலம் முடக்கி, 40 ஆண்டுகளாக குஜராத்தை தாகத்தில் தவிக்கவிட்டவர்களையும் உடன் அழைத்து செல்கிறார்கள். இந்த நடைப்பயணத்தை செய்பவர்களை இந்த தேர்தலில் குஜராத் மக்கள் தண்டிப்பார்கள். நர்மதா திட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்களை மக்கள் தண்டிப்பார்கள். ஒரு காலத்தில் இப்பகுதி மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வந்தனர். அந்த நேரத்தில், இந்த நிலைமையை மேம்படுத்துவதாக நான் சபதம் செய்தேன். 

காங்கிரஸ்

நர்மதா திட்டத்தின் மூலம் சுரேந்திரநகர் மாவட்டம்  மிகப்பெரிய பயனடையும் என்று கூறியிருந்தேன். இன்று பிராந்தியம் அந்த பலனைப் பெறுவதால் நான் சரிபார்க்கப்படுகிறேன். நடைப்பயணத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கு நிலக்கடலைக்கும் பருத்தி விதைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. குஜராத்தில் தயாரிக்கப்படும் உப்பை சாப்பிட்ட பிறகும் சிலர் குஜராத்தில் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். நாட்டின் 80 சதவீத உப்பை குஜராத்தில் உற்பத்தி செய்தாலும், அகாரியா எனப்படும் உப்பளத் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் முந்தைய காங்கிரஸ் அரசுகள் கவனம் செலுத்தவில்லை. சுரேந்திரநகர் மாவட்ட மக்கள் 2017ல் காங்கிரஸூக்கு சில இடங்களை கொடுத்து தவறு செய்து விட்டனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.