பிரதமர் மோடி அழைப்பு - டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 
ms

முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் ஐந்தாம் தேதி அன்று டெல்லி செல்கிறார்.    பிரதமர் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

sm

 தென்கிழக்கு ஆசிய நாடான  இந்தோனேசியாவில் பாலி தீவில்  நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.  அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி -20 நாடுகளின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது.

 இதை முன்னிட்டு ஜி- 20 அமைப்பு குறித்து விளக்கவும்,  அடுத்த ஆண்டு ஜி- 20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும் மாநில முதல்வர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி வரும் ஐந்தாம் தேதி அன்று ஆலோசனை நடத்துகிறார்.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. 

 இந்த அழைப்பினை ஏற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் ஐந்தாம் தேதி காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.  அன்று மாலை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் இரவு சென்னை திரும்புகிறார்.