ஓபிஎஸ், இபிஎஸ்க்கு பிரதமர் காட்டிய பச்சைக்கொடி

 
eo

முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வமும்,  எடப்பாடி பழனிச்சாமியும்  நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள்.   அதிமுக இரு அணியாக பிரிந்து நிற்கும் இச்சூழலில் பிரதமர் உடனான இந்த சந்திப்பு தமிழக அரசியலில்,  குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் அதிமுகவிலிருந்து வெளியே நிற்கும் சசிகலா,  டிடிவி தினகரன் உள்பட அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்.  அப்போதுதான் வெற்றி எளிதில் சாத்தியமாகும் என்று பாஜக தலைமை நினைப்பதாக தகவல்கள் அவ்வப்போது பரவுகின்றன.  இப்படிப்பட்ட சூழலில் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பிரிந்து நிற்பது அதிமுகவின் வாக்கு வாக்குகளை சிதறடிக்கும் என்று பாஜக நினைப்பதாகவும் தகவல்கள் அப்போது பரவுகின்றன.

mo

 இதனால்தான் கடந்த முறை பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது ஓ .பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் தனியாக சந்தித்து பேசவில்லை என்று கூறப்படுகிறது.    பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி அவரை வரவேற்றார்.  பிரதமர் மோடி சென்னையில் இருந்து  புறப்பட்டபோது வழி அனுப்புவதற்காக சென்றிருந்தார் பன்னீர்செல்வம். 

 இந்த நிலையில் நாளை திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை வருகிறார். அப்போது பிரதமரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இருவரும் அனுமதி கேட்டு இருக்கிறார்கள்.  இருவரையும் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி இருக்கிறார்.   அதாவது இருவருக்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.