காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி?.. சோனியா காந்தியுடன் மெகபூபா முப்தி சந்திப்பு..

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசிய பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு அண்ட் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி நேற்று முன்தினம் டெல்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். சுமார் அவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் ஜம்மு அண்ட் காஷ்மீர் மற்றும் நாட்டின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல். ஆனால் மெகபூபா முப்தி இது குறித்து உடனடியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சோனியா காந்தி

சோனியா காந்தி, மெகபூபா சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. எதிர்வரும் ஜம்மு அண்ட் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த முறை தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக காங்கிரஸூடன் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி வைக்கலாம் என்று பேசப்படுகிறது. வரும் நாட்களில் மக்கள் ஜனநாயக கட்சி காங்கிரஸூடன் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு வெளிப்படுத்துகிறது.

பிரசாந்த் கிஷோர்

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததையடுத்து அந்த கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் சோனியா காந்தி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்த்து கொள்ள சோனியா காந்தி பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல். மேலும் கடந்த 4 தினங்களுக்குள் சோனியா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார்.