தலைமை பொருளாதார ஜோதிடரை நியமியுங்க.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டலடித்த ப.சிதம்பரம்

 
வாங்குன கடனுக்கு வட்டி மட்டும் ஒரு மாதம் தள்ளுபடி! அசல மறக்காம குடுத்துடுங்க- நிர்மலா சீதாராமன் 

நாசாவின் புகைப்படத்தை மறுடிவிட் செய்த மத்திய நிர்மலா சீதாராமனை, தலைமை பொருளாதார ஜோதிடரை நியமியுங்க என்று ப.சிதம்பரம் கிண்டல் செய்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமையன்று டிவிட்டரில்,  நாசா டிவிட்டரில் வெளியிட்டு இருந்த அதன்  சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மறு டிவிட் செய்து இருந்தார். இதனை காங்கிரஸூம், காங்கிரஸ் தலைவர்களும் விமர்சனம் செய்தனர். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை விட யுரேனேஸ் மற்றும் புளூட்டோ  மீது சீதாராமன் அதிக ஆர்வம் காட்டுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

சீதாராமன் ரீடிவிட் செய்த நாசாவின் படம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில், பணவீக்கம் 7.01 சதவீதமாகவும், வேலையின்மை 7.8 சதவீதமாகவும் உள்ளதாக வெளியிடப்பட்ட நாளில் நிதி அமைச்சர் (நிர்மலா சீதாராமன்) வியாழன், புளூட்டோ மற்றும் யுரேனேஸின் படங்களை டிவிட் செய்ததில் எங்களுக்கு ஆச்சரியமில்லை.

ப சிதம்பரம்

தனது சொந்த திறமைகள் மற்றும் தனது பொருளாதார ஆலோசகர்களின் திறன்கள் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்பதற்காக நிதியமைச்சர் கோள்களை அழைத்துள்ளார். தொடங்குவதற்கு, அவர் ஒரு புதிய சி.இ.ஏ., தலைமை பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.