மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கிய நாளில் பிரதமரை சங்கடப்படுத்திய மத்திய நிதியமைச்சகம்.. பி.சிதம்பரம் கிண்டல்

 
ப சிதம்

மாநிலங்களுக்கு அறிவுரை வழங்க பிரதமர் தேர்வு செய்த நாளில் மத்திய நிதியமைச்சகம் ஏன் அவரை சங்கடப்படுத்தியது என்பதை அறிவது சுவாரஸ்யமாக இருக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமையன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதேவேளையில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சம் 2022 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கு 8 மாத ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி விட்டது. செஸ் நிதியிலா் போதுமான இருப்பு இல்லாததால் ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாக தெரிவித்தது.

பிரதமர் மோடி

இந்த இரண்டு நிகழ்வுகளையும் குறிப்பிட்டு பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விமர்சனம் செய்துள்ளார். ப.சிதம்பரம் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு மாநிலங்களுக்கு பிரதமர் அறிவுறுத்திய நாளில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.78,704 கோடி பாக்கி வைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. செலுத்த வேண்டிய தொகை உண்மையில் அதிகம். 

வாட் வரி

மாநிலங்கள் கோரும் பாக்கி தொகையை சேர்த்தால், மொத்த தொகை பெரியதாக இருக்கலாம். அரசாங்க கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் மட்டுமே சரியான தொகையை சான்றளிக்க முடியும். மாநிலங்களுக்கு அறிவுரை வழங்க பிரதமர் தேர்வு செய்த நாளில் மத்திய நிதியமைச்சகம் ஏன் அவரை சங்கடப்படுத்தியது என்பதை அறிவது சுவாரஸ்யமாக இருக்கும் என பதிவு செய்துள்ளார்.