உலக பசி குறியீட்டு பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு.. பிரதமர் எப்போது உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்?.. ப.சிதம்பரம்

 
ப சிதம்பரம்

பிரதமர் எப்போது குழந்தைகள் மத்தியில் உள்ள  ஊட்டச்சத்து  குறைபாடு, பசி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் வீண்விரயம் போன்ற உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2022ம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டு பட்டியலில் மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 101வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. 2020ம் ஆண்டில் இந்தியா இந்த பட்டியலில் 101வது இடத்தில் இருந்தது.  அண்டை நாடுகளான நேபாளம் (81), பாகிஸ்தான் (99), இலங்கை (64) மற்றும் வங்கேதேசம் (84) ஆகிய நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. சர்வதேச பசி குறியீட்டு பட்டியலை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின.

மோடி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், மாண்புமிகு பிரதமர் எப்போது குழந்தைகள் மத்தியில் உள்ள  ஊட்டச்சத்து  குறைபாடு, பசி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் வீண்விரயம் போன்ற உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்?. இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்தி

19.3 சதவீத குழந்தைகள் இறக்கிறார்கள், 35.5 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இந்துத்வா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பசிக்கு மருந்தல்ல. மோடி அரசாங்கத்தின் 8 ஆண்டுகளில் 2014ம் ஆண்டு முதல் நமது மதிப்பெண் மோசமாகி விட்டது. மொத்த இந்தியர்களில் 16.3 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதாவது அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என பதிவு செய்துள்ளார்.