64 பேரில் அதிமுக, காங்கிரஸின் 3 வேட்பாளர்கள்யார்?

 
d

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.  ஆனாலும் இன்னமும் அதிமுகவிலும் காங்கிரசிலும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.  

 தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆறு எம்பிக்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி இம்மாதம் 31ஆம் தேதி ஆகும்.   சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் அறையில் அலுவலக வேலை நாட்களில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுவை வாபஸ் வர விரும்பினால் ஜூன் 3ஆம் தேதி மாலை 3 மணிக்கு பெற்றுக் கொள்ளலாம் . வாக்குப்பதிவு ஜுன் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை 5 மணிக்கு தொடங்கி நடைபெறும். 

ra

 தற்போது இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக கூட்டணிக்கு நான்கு எம்எல்ஏக்கள் அதிமுக கூட்டணிக்கு இரண்டு எம்பிக்கள் உள்ளன.  திமுக கூட்டணியின் உள்ள நான்கு எம்பிக்கள் சீட்டில் திமுக மூன்று சீட்டிலும் காங்கிரஸ் ஒரு சீட்டிலும் போட்டியிடுகின்றன.  திமுக தனது மூன்று வேட்பாளர்களை அறிவித்து விட்டது.  ஆனால் காங்கிரசும் அதிமுகவும் இன்னமும் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி இருக்கிறது.   கடும் போட்டியால் தான் இந்த இழுபறி நீடித்து வருகிறது.

p

 இரண்டு கட்சியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.  அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  சி.வி சண்முகம், கோகுல இந்திரா உள்பட நடிகை சந்தியா உட்பட 60 பேர் விருப்பமான அளித்துள்ளனர்.  இருப்பது இரண்டு சீட்டு இதில் 60 பேர் போட்டியில் இருக்கிறார்கள்.  அதேபோல் காங்கிரஸில் இருப்பது ஒரு சீட்.  ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம்,  ரமேஷ் ஜெயராம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் .அழகிரி , அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன்,  தகவல் பகுப்பாய்வு அணி தலைவர் பிரவீன்சக்கரவர்த்தி போட்டியில் இருக்கின்றனர்.  சோனியாவின் ஆதரவு ப.சிதம்பரத்திற்கு இருக்கிறது.  ராகுல் காந்தியின் ஆதரவு பிரவீன் சக்கரவர்த்திக்கு இருக்கிறது . இதனால் காங்கிரஸிலும் இழுபறி நீடித்து வருகிறது.

எது  எப்படியோ வேட்பாளரின் பெயர் வரும் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வாய்ப்பிருக்கிறது.