இணைய கூடாது என்ற எண்ணம் ஈபிஎஸ்க்கு மட்டும் தான் உள்ளது- ஓபிஎஸ்

 
ops

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Image

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து ஈபிஎஸ் பேசியது உண்டா?. அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும். ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும். தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட வரவு செலவு கணக்கு, நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்தது. பொதுக்குழு முறையாக நடைபெறும், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இறுதி வெற்றி எங்களுக்கு தான். இணைய கூடாது என்ற எண்ணம் ஈபிஎஸ்க்கு மட்டும் தான் உள்ளது” எனக் கூறினார்.