தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு விரைவில் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்- ஓபிஎஸ்
திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளப்பட்டியில் மறைந்த அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவருக்கு சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திமுகவில் இருந்து கடந்த 1972 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் பிரிந்து தனியாக அதிமுக கட்சியை உருவாக்கினார் 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றத. இதில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 88 வயதான மாயத்தேவர் சின்னாளபட்டியில் உள்ள தனது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் காலமானார். அவரது உடலுக்கு இன்று 10.08.22 அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனை அடுத்து சசிகலா செய்தியாளிடம் பேசுகையில் :- "40 வருடமாக அதிமுகவில் இருந்து வருகிறேன் எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு காரணம் திமுக தான் பின்னால் இருந்து திமுக தான் செயல்பட்டு வருகிறது. அதிமுக பிளவிற்கு மத்திய
பாஜகவின் அழுத்தம் தான் காரணமா என்ற கேள்விக்கு பாஜகவின் அழுத்தம் கிடையாது அதிமுகவில் பிரிந்து இருப்பவர்களை ஒன்று சேர்ப்பது தான் எனது வேலை
அனைவரையும் ஒன்று சேர்த்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்” என பேசினார்.
இதனைத் தொடர்ந்து சின்னாளப்பட்டிக்கு வருகை தந்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மாயத்தேவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்ஜிஆரின் வெற்றி சின்னம் இரட்டை இலை. சின்னத்தை அதிமுகவுக்கு பெற்று தந்தவர் மாயத்தேவர். அவரது மறைவு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு விரைவில் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்” எனக் கூறினார்.