நேற்று வரை ஒபிஎஸ் - இன்று முதல் இபிஎஸ் : அணி தாவிய மா.செ.க்கள்

 
ப்

 நேற்று வரைக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மாவட்டச் செயலாளர்களில் இரண்டு பேர் இன்றைக்கு எடப்பாடி பக்கம் போய் இருக்கிறார்கள்.  இதனால் ஓ. பன்னீர் செல்வத்தின் பலம் குறைந்து போயிருக்கிறது .  ஆதரவாக இருந்த 12 மாவட்ட செயலாளர்களில் இரண்டு பேர் அணி தாவி விட்டதால் ஆதரவு மா.செக்கள் எண்ணிக்கை 10 ஆக குறைந்திருக்கிறது.

pp

 அதிமுகவில்  நீயா நானா என்கிற போட்டி இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கிறது.  இதில் எடப்பாடி பழனிச்சாமி,  ஓ . பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார்கள்.   கடந்த ஒரு வாரமாக ஓ.  பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரது வீட்டிலும் ஆதரவாளர்கள் கூடி அவரவர்  பலத்தை நிரூபித்து வருகின்றனர்.

 அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களின் 60 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.   ஓ. பன்னீர் செல்வத்திற்கு 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

000

 இந்த நிலையில் நேற்று வரைக்கும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த  நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும்,  விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரனும் திடீரென்று இன்றைக்கு எடப்பாடி பக்கம் தாவி இருக்கிறார்கள்.  இரண்டும் மா.செக்கள் திடீரென்று அனிதாவியதால் ஓ .பன்னீர்செல்வத்திற்கு இருந்த 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தற்போது 10 ஆக குறைந்திருக்கிறது.  

 தேனி மாவட்ட செயலாளர் செய்யது கான்,  சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக்,   திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர்,   திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்  பலராமன் ,  கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன்,  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம்,  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன்,  அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன்,  தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி,  பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள்.