முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு! நேரில் வைத்த கோரிக்கை

 
os

 முதல்வர் மு. க. ஸ்டாலினை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தார்.   சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் .

or

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் மாநில அளவில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி எம். பியுமான ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

 இந்த மனுவில்,   பெரிய குளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.  மேலும்,   பெரியகுளம் நகரில் 10.4.1916 ல் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் பென்லாண்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு 106 ஆண்டுகள் செயல்பட்டு வரும் சிறப்பு வாய்ந்த அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தற்போதைய நிலை பற்றி தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ஒரு சில மருத்துவ சேவை குறைபாடுகள் பற்றி பொதுமக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் நான் கடந்தது ஒன்பதாம் தேதி அன்று மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அங்கிருந்த மக்களின் கோரிக்கைகள் மருத்துவமனைக்காக கூடுதல் தேவைகள் பற்றி கேட்டிருந்தேன்.

ma

 பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடனடியாக தேவையான மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் செவிலியர்களை பற்றிய விவரங்களை இந்த கடிதத்துடன் இணைத்து இருக்கிறேன்.   முதல்வர் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ள அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

 இந்த மனுவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடமும்  ரவீந்திரநாத் வழங்கியிருக்கிறார்.