இபிஎஸ்சுடன் பேச்சு நடத்த ஓபிஎஸ் தயார் -குன்னம் ராமச்சந்திரன்

 
ku

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக  வேட்பாளர்களுக்கு சின்னம் அறிவிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி இருந்தார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த வழக்கு தொடர்ந்ததால், மேற்கொண்டு அடுத்த பொது குழுவுக்கு தடைகேட்டு  தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்திருப்பதால் கட்சியின் விதிகளை மீறிவிட்டதாக சொல்லி ,  மேலும் பொருளாள பதவியில் உள்ளீர்கள்.  அதனால் உங்களுக்கு அந்த அதிகாரமில்லை என்று  அந்த கடிதத்தை எப்படி ஏற்க முடியும் என்று சொல்லி அந்த கடிதத்தை ஏற்க மறுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

op

 இந்த நிலையில் அதிமுகவின் தொண்டர்களின் நலன் கருதி எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசிக்க ஓ. பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன்.

ஓ. பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாக எடப்பாடி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  பொருளாளர் பதவியில் மட்டுமே ஓ. பன்னீர்செல்வம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.  ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் படி பொருளாளருக்குத்தான் முழு அதிகாரம் உண்டு என்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன்.  

அதிமுகவின் விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில அவர்,   உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அவை தலைவர்,  பொருளாளருக்கு மட்டுமே கட்சியும் சின்னமும் செல்லும் என்று தேர்தல் ஆணையத்தின் படி பொருளாளருக்கு முழு அதிகாரம் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறார் குன்னம் இராமச்சந்திரன்.   மேலும்,   அதிமுக தொண்டர்களின் நலன் கருதி எடப்பாடி பழனிச்சாமி உடன் கலந்து ஆலோசிக்க ஓ . பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.