ஆதரவாளர்களை சந்தித்த ஓபிஎஸ்! செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு

 
o

 ஆதரவாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துள்ளார்.  

மெல்ல மெல்ல இத்தனை நாளும் எழுந்த ஒற்றை தலைமை  குரல் தற்போது அதிமுகவில் ஓங்கி ஒலித்து இருக்கிறது .  இதனால் எடப்பாடி பழனிச்சாமி ,ஓ . பன்னீர்செல்வம் என்று  இருவரது ஆதரவாளர்களும் நகரம் முழுவதும்  போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

 அந்த போஸ்டர்களை ஒருவருக்கு ஒருவர் கிழித்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டும்  வருகின்றனர்.   ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் கிழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சாலை மறியல் நடந்ததால் விவகாரம் பெரிதாகி கொண்டிருப்பதை உணர்ந்த பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் அமைதி காக்கவும் என்று டுவிட்டர் மூலமாக கேட்டுக்கொண்டிருக்கிறார் .

o

பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டு தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.  வீட்டிற்கு வெளியே வந்து அவர்களை சந்தித்த ஓபிஎஸ்,  செய்தியாளர்களை சந்திக்க மறுத்துள்ளார்.

இரட்டை தலைமை என்கிற ஒப்பந்தத்துடன் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் இணைந்தார்கள்.   அன்று முதல் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்,  பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று இரட்டை தலைமை போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது.  கட்சியின் நிர்வாகிகளில் இருந்து தேர்தலில் வேட்பாளர்கள் வரைக்கும் எடப்பாடி பழனிச்சாமியும்,  பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவாளர்களை நியமித்து தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.  இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஒரு படி மேலே சென்று இல்லை பல படிகள் மேலே சென்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்.   இதனால் அதிமுகவை ஒற்றை தலைமைக்கு கொண்டு வந்து,  தான் பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

இதனால் டென்ஷனில் இருக்கிறார் ஓபிஎஸ்.  அவர் டென்ஷனில் இருப்பதை பார்த்து அவரது ஆதரவாளர்களும் படு டென்ஷனில் உள்ளனர்.