புஸ்ஸான எடப்பாடி புயல்! புதுத்தெம்பில் வந்த ஓபிஎஸ்

 
ஒப்

புயலாய் சீறிக்கொண்டிருந்த எடப்பாடி டீம் புஸ்ஸானதும் புதுத்தெம்பில் தலைமைச்செயலகம் வந்து சென்றிருக்கிறார் ஓபிஎஸ்.

கடந்த 14ஆம் தேதி நடந்த மா.செ.க்கள் கூட்டத்திற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் அவரவர் வீட்டில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.   ஒற்றைத் தலைமை குறித்த போஸ்டர் யுத்தமும் நடந்து வந்தது.

 அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒற்றை தலைமை யுத்தம் அவ்வப்போது எழுந்து அடங்கி வந்த நிலையில்,  இது இறுதி யுத்தம் என்று எல்லோரும் நினைக்கும் அளவிற்கு ரொம்ப பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது.  எடப்பாடி பழனிச்சாமி இந்த முறை எப்படியும் அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வந்து அதை தனது தலைமையின் கீழ் கொண்டுவந்து பொதுச்செயலாளர் ஆகிவிடுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் புயலாய் சீறிக் கொண்டிருந்த நிலையில் ஒரு கேள்வியைக் கேட்டு புயலைப் புஸ்ஸாக்கிவிட்டார் ஓபிஎஸ்.

எப்

 மா.செ.க்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை கோஷம் இந்த அளவுக்கு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்த்திராத ஓபிஎஸ்  ரொம்பவே அப்செட்டில் இருந்து வந்தார்.  அவரது மவுனம் எடப்பாடி மூவ்க்கு சம்மதமா என்றும் அவரது ஆதரவாளர்களே நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.  இந்த நிலையில் திடீரென்று,  செயற்குழுவில் எடுத்த  தீர்மானத்தின்படி ஒற்றைத் தலைமையை முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு இல்லை . அப்படி பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரத்தை முன்னெடுத்தால் செயற்குழுவின் தீர்மானத்தை மீறிய செயலுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓபிஎஸ் ஒரு குண்டை போட்டுவிட்டார்.

ஒற்றைத்தலைமைதான் என்று ஓங்கி ஒலித்தவர்கள் எல்லாரும், ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று பழையபடி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

தான் நினைத்தது நடக்காது போலிருக்கிறதே என்று தெரிந்ததும் சென்னையில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவசரமாக புறப்பட்டு சேலத்திற்கு பறந்துவிட்டார்.   மா.செ.க்கள் கூட்டத்திற்கு பின்னர் மிகுந்த சோர்வுடன் இருந்த ஓபிஎஸ், எடப்பாடி நினைத்தது நடக்காது என்கிற புதுத்தெம்புடன்  இன்று தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றிருக்கிறார்.  ஓபிஎஸ் வருவதை அறிந்த எடப்பாடி ஆதரவாளர்கள் அவர் வருவதற்குள் அங்கிருந்து பறந்திருக்கிறார்கள்.

 பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை  விவகாரத்தை முன்னெடுக்க முடியாது என்றாலும் கூட பொதுக்குழுவில் இயற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று பொன்னையன், சிவி சண்முகம் ,ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், உதயகுமார், வளர்மதி, வைகைச்செல்வன், செம்மலை, ஜேசிடி பிரபாகர் அடங்கிய குழு இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்  கூடியிருக்கிறது . அந்த நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் வருகிறார் என்ற தகவல் தெரிந்திருக்கிறது. 

ஒ

 ஓபிஎஸ் வருகிறார் என்றதும் அவரது ஆதரவாளர்கள் தலைமை அலுவலத்தில் குவிந்து விட்டனர்.  பத்திரிக்கையாளர்களும் அங்கே குவிந்துவிட்டனர்.  இந்த தகவல் எல்லாம் தலைமை அலுவலகத்தின் உள்ளே ஆலோசனையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரியவர அவர்கள் சேலத்திற்கு சென்ற எடப்பாடியிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.  அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை .  திடீரென்று சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

 ஓபிஎஸ் வருகிறார் என்று தெரிந்ததும் வெளியேறுகிறீர்களா என்று கேட்டதற்கு அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.   அவசர வேலை என்று சொல்லி விட்டு காரில் ஏற,  அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர்களை  அர்ச்சித்து அனுப்பியிருக்கிறார்கள்.  

 அதன்பின்னர் தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓ. பன்னீர்செல்வம்  ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். பொன்னையன், உதயகுமார், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், வைகைசெல்வன், ஜேசிடி பிரபாகர் ஆகியோருடன்  வைத்திலிங்கம், தர்மர்,  மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

  கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த சோர்வுடன் இருந்த ஓபிஎஸ் இன்று புதுத் தெம்புடன் வந்ததை கண்டு அவரது ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பி இருக்கிறார்கள்.   சென்னையில் ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் சேலத்தில் கேபி முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .  அதிமுகவில் பரபரப்பு இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.