இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முடிவு! பறந்தது 11 பக்க கடிதம்

 
l

 ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமையில் இயங்கி வரும் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.   அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை இருக்கும்போது இந்த இரட்டை தலைமையின் பதவிக்காலம் முடிவதற்கு உள்ளாக திடீரென்று ஒற்றைத் தலைமையைக் கொண்டு வர எடப்பாடி பழனிச்சாமி முயற்சி எடுத்து வருகிறார். 

ப்ப்

 ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில்,  அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தேர்வு செய்யப்பட்டால் அதற்கு ஓ .பன்னீர்செல்வம் தான் தலைமை ஏற்க வேண்டும் என்ற அவரது ஆதரவாளர்களும் , எடப்பாடி பழனிச்சாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் சொல்லி வருகின்றனர்.  இதில், அதிமுகவில் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளார்கள் என்றும்,  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளார்கள் என்று தகவல்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்து நேரிலும் தொலைபேசியிலும் ஆதரவு தெரிவித்துள்ளனர் மா.செக்கள் என்று தகவல் பரவுகிறது.  இந்த நிலையில் ஓ.  பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.  அதில் 11 அம்சங்களை உள்ளடக்கி அந்த கடிதத்தை எழுதி இருக்கின்றனர்.  

ல்

 ஒற்றைத்தலைமைக்காக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.  தற்போது இருக்கும் இரட்டை தலைமை பதவி காலம் முடிவதற்குள் மாற்றம் கொண்டு வந்தால் தேர்தல் ஆணையத்தின் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.   ஒற்றை தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னமும் முடக்கப்படலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

 இதனால் அதிமுகவில் நாளுக்கு நாள் அல்ல நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது.